வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமணங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்தன.
போர் காரணமாக 1980களில் இந்தப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
போர் முடிந்த பின்னர் அங்கு தமிழ் மக்கள் குடியேற முனைந்தபோது தொல்பொருள் அடையாளம் என்று கூறி அவர்களை அங்கு குடியேற அனுமதிக்கவில்லை.
இந்த நிலையிலேயே கச்சல் சமணங்குளத்தில் விகாரை கட்டப்பட்டு நேற்று திறந்து வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.