கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்பட வைப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடகப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சரத்துகள் திருத்தப்பட்டால் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிர்ணயிக்கும் கால எல்லை வரை மீண்டும் செயற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
இந்த சட்டமூலம் ஜூன் 26 ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.