“சிங்களத் தலைவர்கள் தமிழ் சமூகத்தினரை மாத்திரமல்லாமல் சிங்கள சமூகத்தினரையும், சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றுகின்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டினார்.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு இலக்கையும் இந்த நாடு அடைய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலமாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனத்தில்கொள்ள வேண்டும்
சகல மக்களும் சமத்துவ உரிமையுடன் – சமத்துவ சுதந்திரத்துடன் வாழக்கூடிய நியாயமான தீர்வை ஜனாதிபதி வழங்கினால் நாடு விரைவில் அபிவிருத்தியடையும்.
இதனை விடுத்து பொய்யான கருத்துக்களை வெளிநாடுகளுக்குச் சென்று கூறுவதன் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி ரணிலிடம் கூறிவைக்க விரும்புகின்றோம்.” – என்றார்.