அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இல்லாமல் எந்தவொரு கூட்டணியாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இது கடந்த கால வரலாறு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார். தேவையேற்படின் கட்சிகள் எம்முடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம். கதவு திறந்தே உள்ளது.” – என்றார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சிக்குள் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.