இலங்கை தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய பொறுப்புக்கூறல் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது – இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐ. நா. மனித உரி மைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை தொடர்பில் பேரவையின் நிலைப்பாட்டை நேற்றைய தனது உரையில் கோடி காட்டினார்.
இதனிடையே, நாளை புதன்கிழமை இலங்கை குறித்து வாய்மூல அறிக்கையை அவர் சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பொறுப் புக் கூறல் தொடர்பான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்துள்ளது.
எனினும், இலங்கை தொடர்ந்து எம்முடன் செயல்பட்டு வருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு சென்ற மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் அங்கு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து பல பரிந்துரைகளை செய்துள்ளனர். அவற்றை இலங்கை அதிகாரிகள் நடை முறைப்படுத்தவேண்டும் – என்றும் வலியுறுத்தினார்.