இலங்கையில் நாய்க்குட்டிகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை!

editor 2

மத்திய மாகாணத்தில் நாய் குட்டிகளுக்கு பரவிய அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்று, தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இந்த தொற்றின் பரவல் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைத் தவிர்த்து கண்டி, கம்பளை, பேராதனை, கினிகத்ஹேன மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய் குட்டிகளுக்கு பரவும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட குட்டிகள் சுவாசப் பிரச்சினைகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஜேர்மன் ஷெப்பர்ட் மற்றும் லாப்ரடோக் போன்ற கலப்பு இன நாய்களுக்கும் இந்த நோய் தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதை தவிர்க்குமாறும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு நாய்களை குளியாட்டுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் சாகரதிலக்க வேண்டுகோள் விடுக்கிறார்.

Share This Article