கிறீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோரின் படகில் இருந்து சுமார் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட 78 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஆட்கடத்தல்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த விபத்து அடிகோடிட்டு காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், ஏதிலிகள் நிறுவனம் என்பன தொடர்ந்தும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளன.