அஸீஸ் காங்கிரஸின் தலைவர் காலமானார்!

editor 2

மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் – தொழிற்சங்கவாதியான ‘மனிதருள் மாணிக்கம்’ எனப் போற்றப்படும் அமரர் அப்துல் அஸீஸின் மகனான அஷ்ரப் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார்.

அஷ்ரப் அஸீஸும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தவர். அஸீஸ் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாக அரசியல், தொழிற்சங்கப் பணிகளை முன்னெடுத்தவர்.

உடல்நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

கொழும்பு, பம்பலப்பிட்டியவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானார்.

அவரின் ஜனாஸா கொழும்பு, தெமட்டகொடை, குப்பியாவத்த முஸ்லிம் மையவாடியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Share This Article