வடமராட்சி மருதங்கேணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இன்று இடம்பெற்ற விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின் பின்னர் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடிய நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் உட்பட்ட நால்வரே கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.