ஊவா – கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு!

editor 2

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாணத்துக்கு வருகை தருமாறு ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்குச் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

Share This Article