நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாவுக்கும் அதிக தொகையில், குறைக்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.