மீண்டும் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.