திடீரென இந்தியாவுக்காகத் தாளம் போடும் அலி சப்ரி!

editor 2

சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பையே 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தொழித்தோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினமான நேற்றைய தினத்தை நினைவுகூரும் விதத்தில் அலி சப்ரி தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.

இலங்கை சார்பில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நினைவு நாளுக்கு எந்தவொரு இரங்கல்களும் தெரிவிக்கப்படாத நிலையில் இம்முறை திடீரென வெளிவிவகார அமைச்சர் ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் உள்ளதாவது:–

“32 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளால் இதே நாளில் (மே 21) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

நிதி திரட்டும் சர்வதேச வலையமைப்பினர், அரசியல் ஆதரவாளர்கள், புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்தனர்.

அந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தையே 14 வருடங்களுக்கு முன் அழித்தொழித்தோம். இலங்கையில் அமைதியும்– சமாதானமும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.” – என்றுள்ளது.

Share This Article