சர்ச்சையான ‘ரஜ உப்பு’ ‘ஆனையிறவு உப்பு’ ஆனது!

சர்ச்சையான ‘ரஜ உப்பு’ ‘ஆனையிறவு உப்பு’ ஆனது!

editor 2

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ரஜ உப்பு’ என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது இது தொடர்பில் பலரும் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் மாற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட் டது. இந்த நிலையிலேயே ஆனையிறவு உப்பு என்று பெயர்
மாற்றப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பு, வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் அறிய வருகிறது.

Share This Article