மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளார்.
அவர் தனது தனியார் வகுப்பில் கற்று வந்த கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரை பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்ற போதே கையும் மெய்யுமாகச் சிக்கியுள்ளார்.
இருவர் மீதும் சந்தேகமடைந்த ஓட்டோ சாரதிகள், விடுதி வரை பின் தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்தனர். அதன்பின்னர் குறித்த ஆசிரியரைக் கைது செய்த பொலிஸார், மாணவியை எச்சரித்துவிட்டு விடுவித்தனர்.