தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ.சுமந்திரன்!

தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ.சுமந்திரன்!

editor 2

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராக தானே போட்டியிடவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தமக்குத் தெரிவித்ததாக த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கும் தமிழரசுக்கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிகள் அமைப்பது தொடர்பில் இரு தரப்பும் உரையாடியதாகத் தெரிவித்த சித்தார்த்தன்,

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சிவஞானம் சிறீதரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குமாறு தாம் கோரியதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தாகவும் இந்நிலையில் தாமே முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் சுமந்திரன் தமக்குத் தெரிவித்தாகவும் சித்தார்த்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் தமது தரப்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிறேமச்சந்திரன், வேந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமது தரப்பிலிருந்தும் தமிழரசுக்கட்சி தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் பங்குகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக,

தமிழ் காங்கிரஸ் சார்பில் செ.கஜேந்திரன், காண்டீபன் ஆகியோரும் தமது கூட்டணியினரும் சந்திப்பில் ஈடுபட்டதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

எந்த சபைகளிலும் ஜேவிபி ஆட்சி அமைக்க ஒத்துழைக்கப் போவதில்லை செ.கஜேந்திரன் தெரிவித்தாகவும் அதனையே எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்ததாகவும் சித்தார்த்தன் கூறினார்.

Share This Article