இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், பற்றாக்குறை காரணமாக வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தாமதமாகும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான தற்காலிகத் தீர்வாக வாகன எண்ணை உள்ளடக்கிய மற்றும் பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப்
பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த தற்காலிக நடவடிக்கை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகன இலக்கத்தகடுகள் பற்றாக்குறை எப்போது தீர்வுக்கு வரும் என்பதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிடவில்லை.