யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஆனைமுகன் மற்றும் மற்றொருவர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக பாலச்சந்திரன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மோட்டார் சைக்கிளும் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தான் பலமாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர்,
தனது 3 பவுண் தங்கச் சங்கிலியையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.