இலங்கை – வியட்நாம் இடையே 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை - வியட்நாம் இடையே 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

editor 2

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. 

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. 

இதன்போது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும், இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உற்பத்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வியட்நாம் விவசாய விஞ்ஞான நிறுவகத்திற்கும், இலங்கை விவசாயத் திணைக்களத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டன. 

மேலும், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும், வியட்நாமின் இராஜதந்திர நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவர் நிறுவனத்திற்கும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

Share This Article