முல்லைத்தீவு மாவட்டம் – மாத்தளன் சிறுகடல் களப்பில் இருந்து நேற்று திங்கட்கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.
இவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் நேற்று நந்திக்கடல் களப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி
தர்மலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று சடலத்தைப் பார்வையிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று உடற்கூற்று
பரிசாதனை செய்த பின்னர் உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.