பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டு, மேலும் பலரைக் காயமடையச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், 2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியினுள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில், குறித்த நபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.