இலங்கை – பாக். பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு!

இலங்கை - பாக். பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு!

editor 2

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 5 ஆவது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில் கடந்த 28 ஆம் திகதி இரு நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. 

இதில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தலைமையிலான தூதுக்குழு கலந்து கொண்டிருந்தது. 

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய புதிய வழிகளை ஆராய்வதற்கான வாய்ப்பு இந்தக் கலந்துரையாடல் ஊடாக கிடைக்கப் பெற்றதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This Article