எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.