தற்போதைய அரசாங்கமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கும் – என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாமல் ராஜபக்ஷ எம்.பி.
மொட்டுக் கட்சியின் தற்போதைய போக்கைக் கண்டு அரசாங்கம் பயந்தாலும் எனது கட்சி ஜனாதிபதியைக் கண்டு பயப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நேற்று முன்தினம் அவர் தலைமையில் கொழும்பு – நுகேகொடையில் நடைபெற்றது.
இதில், உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘நாங்கள் ஏமாற்றுதலை சகித்துக்கொண்டோம் – இப்போது எழுந்து நிற்போம்’ என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தியது.
இதில், சி. பி. ரத்நாயக்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட
முன்னாள் எம். பிக்கள் பலரும் பங்கேற்றனர்.