தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்ட மேடையை படம்பிடித்தார் என்று கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச உழைப்பாளர் தினமான நேற்று முன்தினம் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு – காலிமுகத்திடலில் கூட்டத்தை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டம் ஆரம்பிக்க முன்னர் பதுளையை சேர்ந்த – கொழும்பில் பணியாற்றும் தமிழ் இளைஞர் ஒருவர் அந்த மேடையை படம் பிடித்தார்.
இதனை அவதானித்த பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
ஜனாதிபதி பங்கேற்கவிருந்த மே தினக் கூட்ட மேடை மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் தான் படம் பிடித்தார் என்று பொலிஸாரிடம் இளைஞர் கூறினார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.