அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு
தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் நடை பெற்றது.
இதன்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் கூட்டத்தை நிறுத்திவிட்டு தேசிய
மக்கள் சக்தியினரை வெளியேற வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச் சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.