வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் வட்டுக் கோட்டை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.