இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம
குமார தெரிவித்தார்.
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை எனக் கூறிய அவர், அதனை தடை செய்யாததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.
எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்-என்றார்.