பிற்பகலில் மழை!

பிற்பகலில் மழை!

editor 2

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். 

மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article