மூதூரில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

மூதூரில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

editor 2

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

சிறிய கப் வாகனம் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மூதூர் -ஆனைச் சேனையைச் சேர்ந்த 62 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article