இலங்கை – பாகிஸ்தான் கூட்டு கடற்பயிற்சி கைவிடப்பட்டது?

இலங்கை - பாகிஸ்தான் கூட்டு கடற்பயிற்சி கைவிடப்பட்டது?

Editor 1

திருகோணமலை கடற்பகுதியில் இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பயிற்சி தொடர்பில் இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது.

‘இலங்கையின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் திருகோணமலை அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திருகோணமலை கடற்பகுதியில் இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுதொடா்பாக தமது பாதுகாப்பு நலன் சாா்ந்த கவலையை இலங்கையிடம் இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து அந்தக் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டது’ என்று இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இதுகுறித்து இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து உத்தியோகபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Share This Article