கிழக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பலத்த மழை!

கிழக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பலத்த மழை!

Editor 1

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் (19) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேநேரம், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Share This Article