அரச சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இந்த நிலைமை உள்ளது. எனவே, 2 ஆயிரம் புதிய பொலிஸார் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னாருக்கு வந்த ஜனாதிபதி பிரசார கூட்டங்களில உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணைய செய்யுங்கள். இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வேலை இது.
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும். இதன்மூலம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதேபோன்று இராணுவம் , கடற்படை, விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெறறோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்துக்கூற வேண்டும் – என்றார்.