2024 ஆம் ஆண்டு நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமான புள்ளிகளைப் பெற்று தகுதி பெற்ற மாணவர்களுக்கு, 2025 ஆம் ஆண்டில் தரம் 6இல் புதிய பாடசாலைகளில் இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 30 ஆம் திகதி வரை காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
http://g6application.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளது.