சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (08) நண்பகல் 12.12 மணியளவில் நயினமடம், சந்தலங்காவ, குண்டகசாலை, மஹியங்கனை மற்றும் கல்முனை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்றையதினம் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.