உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுக்கள் மீதான விசாரணைகளின் பின்னரான தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (04) அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.