உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்
கிழமை மாத்தறை – தெய்யேந்திர பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் 5 ஆண்டுகள் நிறைவை குறிக்கிறது. பெரும்பாலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது.
இந்த ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னர், சம்பவத்துக்கு பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்டுவார்கள் – நீதி நிலைநாட்டப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். முன்னாள் அமைச்சர்கள் மூவர் இதுவரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவர் அப்படியே மறைந்தே இருக்கட்டும் பதற்றப்படத்தேவையில்லை – என்றார்.