ஏப்ரல் தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு!

ஏப்ரல் தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு!

editor 2

இந்த வருட வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அரச சேவையின் வேதனத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட வேதன அளவுத் திட்டத்திற்கமைய வேதனக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த யோசனையைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை கீழ் காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது

1. அரச சேவையின் வேதனத் திருத்தத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல் 

2. அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசிற்கு சொந்தமான கம்பனிகள் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்.

Share This Article