யாழில் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

யாழில் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(21.03.2025) இடம்பெற்றுள்ளது.

கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்களுடன் குளிப்பதற்காக இன்று நண்பகல் இளவாலை, சேந்தாங்குளம் கடலுக்கு சென்றுள்ளனர்.

கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share This Article