உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு சாதாரண தரப் பெறுபேறு அவசியமில்லை!

உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு சாதாரண தரப் பெறுபேறு அவசியமில்லை!

editor 2

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றைக் கருத்தில் கொள்ளாமல், 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு மாணவர்களை 12 ஆம் தரத்திற்குள் இணைத்துக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இந்த தொழில்துறை பாடத்திட்டம் “13 ஆம் ஆண்டு சான்றளிக்கும் கல்வித் திட்டத்தின்” கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. 

கல்வி அமைச்சின் அறிவிப்பின் படி, இந்த சேர்க்கையில், மாணவரின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாது. 

இந்த பாடநெறிக்கு இணையும் மாணவர்களுக்குக் கீழ்வரும் தொழில்துறை விடயங்களைக் கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், மாணவர்களை உள்வாங்கும் பாடசாலைகளின் பட்டியலும், விண்ணப்பப் படிவமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Share This Article