யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்; பட்டியல் விபரம் வெளியாகியது!

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்; பட்டியல் விபரம் வெளியாகியது!

editor 2

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 159 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 136 வேட்பு மனுக்கள் கட்சிகள் சார்பாகவும், 23 வேட்புமனுக்கள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கட்சிகளின் 114 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கட்சிகளின் வேட்புமனுக்கள் 22 நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சுயேட்சைக் குழுக்களின் 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில்,

யாழ். மாநகர சபையில்

தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும்,

ஞானப்பிரகாசம் சுலக்ஷன், நரேந்திரன் கௌசல்யா ஆகிய சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகிய சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நகரசபைக்கானது,

வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகரசபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகிய சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபைக்கானது,

அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலி. மேற்கு பிரதேச சபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. துரைராஜா துஸிந்தன் என்ற சுயேட்சைக்குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச சபைக்கானது,

சவரிமுத்து ஸ்ராலின் என்ற சுயேட்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலி.தென் மேற்கு பிரதேச சபைக்கானது,

ஸ்ரீலங்கா கொமினிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலி. தெற்கு பிரதேச சபைக்கானது,

தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலி.கிழக்கு பிரதேச சபைக்கானது,

மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபைக்கானது,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் தவம் தவநிலவின் தாசன் என்ற சுயேட்சைக்குழுவினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பிரதேச சபைக்கானது

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் என்ற சுயேட்சைக்குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைக்கானது,

வைத்திலிங்கம் ஜெகதாஸ் என்வரின் சுயேட்சைக்குழுவினதும் குணரத்தினம் குகானந்தன் என்ற சுயேட்சைக்குழுவினதும் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்கானது,

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. திலீப் ஜீவரஞ்சன் என்ற சுயேட்சைக்குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Share This Article