எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அண்மையில் 9 கட்சிகளின் கூட்டணியை அமைப்பதற்காக பேச்சு நடத்தியது. இரண்டு பேச்சுகளில் பங்கேற்ற பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.