ஜூன் மாதத்தில் மின் கட்டணத்தில் திருத்தம்!

ஜூன் மாதத்தில் மின் கட்டணத்தில் திருத்தம்!

editor 2

நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை, எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை பொறுத்து ஜூன் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின பரிந்துரையின்பேரில், நாட்டின் தற்போதைய விதிமுறை களின்படி, மின்சார கட்டண மாற்றங்கள் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என மின்சார சபையின் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய வறட்சி காரணமாக நிலைமை கடினமாக இருப்பதாகவும் மேமாதத்தில் மழை பெய்யுமாயின் செலவுகள் குறையலாம். தற்போது எரிபொருள் மூலமானமின்சார உற்பத்தியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, வருங்கால மின்சார கட்டண மாற்றங்கள் பற்றிய எந்த உத்தியோக பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை. இது வானிலை நிலைமைகளை பொறுத்தே அமையும் – என்றார்.

Share This Article