யாழ்.போதனாவின் சேவைகள் வழமைக்கு!

யாழ்.போதனாவின் சேவைகள் வழமைக்கு!

editor 2

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் நேற்று வழமைக்குத் திரும்பியுள்ளன.

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பினால், நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் நேற்று முதல் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சைகளை பெற்றுக்
கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் மருத்துவ அதிகாரிகள்
சங்கத்துக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவாரத்தைகளின்போது இணக்கம் காணப்பட்டது.

அதனால் மக்களின் நலன் கருதி, தமது பகிஷ்கரிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தது.

அதற்கமைய மருத்துவ சேவைகள் நேற்று முதல் வழமைக்குத்திரும்பின.

Share This Article