எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மதவச்சி, புல்எலிய, திபுல்வௌ வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல புராதன விகாரையின் விகாராதிபதி ஷப்த விஷாரத கச்சாயன வம்ஷாலங்கார
சாசன கீர்த்தி ஸ்ரீ பிலியந்தல சுபோத தேரரின் ஆலோசனையின் பிரகாரம் அவ்விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட சரோஷிக செனவிரத்ன ஞாபகார்த்த சைத்திய, மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், தற்போது பெரும் எரிபொருள் வரிசை
உருவெடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தாலும், நாட்டை ஆளமுடியா நிர்வாக திறனின்மையாலும் ஏற்பட்ட நெருக்கடியே இதுவாகும்.
பெருமளவிலான ஊழியர்கள் வேலையிழந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே,இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்படவேண்டும். இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியோ, பிரதமரோ,அல்லது அமைச்சர்களோ அல்ல, சாதாரணமக்களே இதற்கு முகம் கொடுக்கின்றனர்.
எனவே, எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். என்றார்.