இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் இலங்கையர்கள் 162 பேர் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
அதன்படி, இதுவரை இலங்கையர்கள் 2,052 பேர் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.