இராணுவத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளனர் என்று படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒரு பகுதியினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களில் இணைந்து இயங்கி வருகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று படைத் தரப்பு அறிவித்துள்ளமை தெரிந்ததே.