யாழ்.மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்தில் சிக்கியது!

யாழ்.மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்தில் சிக்கியது!

editor 2

யாழ். மாவட்ட செயலரின் மகன் செலுத்தினார் என்று கூறப்படும் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது. இதில்,
மாவட்ட செயலரின் மகனும் அவரின் நண்பரும் காயமடைந்தனர்.

பலாலி வீதியில் – யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்ததாகத் தெரியவருகின்றது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். சாரதி இருக்கையில் இருந்தவரின் கால் வாகனத்தில் சிக்கிக் கொண்டதால் சுமார்
ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர்மீட்கப்பட்டார்.

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article