ஐ. நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று ஜெனிவா பயணமானது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத் தொடர் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கவே இந்தக் குழுவினர் ஜெனிவா பயணமாகியுள்ளனர். இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்த விசேட அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் குறிப்பிட் டுள்ளன.
இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சொல்வதாக இந்த அறிக்கை அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.