ஏப்ரல் 26 இல் தேர்தல்?

ஏப்ரல் 26 இல் தேர்தல்?

editor 2

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட வலுவான வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க, ‘இருப்பினும் அன்றைய தினம் தேர்தல் திகதி முடிவு செய்யப்படும் என்பது அர்த்தமில்லை. உள்ளூராட்சி தேர்தலை எப்போது நடத்தலாம்
என்பதை முன்னதாகக் கூடி தீர்மானிக்கலாம்’, என்றார்.

மேலும், ‘தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இடையே பரிந்துரைகள் உள்ளன. இருப்பினும், உள்ளூராட்சி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு தனது முடிவுகளை எடுக்கிறது. வரவு – செலவு திட்டம் அல்லது வேறு எந்த வெளிப்புற விடயங்களும் எங்கள் முடிவுகளை பாதிக்கவோ அல்லது குறுக்கிடவோ இல்லை.

‘எங்களை சந்தித்த எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட விவாதம் நிறைவடையும்வரை வேட்பு மனு திகதியை அறிவிக்க வேண்டாம் என்று கேட்டனர். ஆளும் கட்சி முற்கூட்டியே அறிவிக்குமாறு வலியுறுத்தியது. நாம் அனைத்து பரிந்துரைகளையும் கருத்தில் கொள்வோம். எனினும் சட்டப்படியே செயல்படுவோம்’- என்றார்.

Share This Article